COVID-19 (Sep 16): புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்- 842, குணமடைந்தவர்கள்- 821, இறப்பு – 1
அமீரகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 842 ஆகவும், பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 821 ஆகவும் இறந்தவரின் எண்ணிக்கை 1 ஆக இருப்பதாக அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைப்பு (MoHAP) இன்று புதன்கிழமை செய்தி வெளியிட்டது.
மேலும் புதிதாக மேற்கொண்ட 94,000 பரிசோதனையின் மூலம் இந்த புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைப்பின் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அரசு “அவசர ஒப்புதல் ” (Emergency Approval) அளித்துள்ளதாகவும், இந்த தடுப்பூசி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிக ஆபத்தில் இருக்கும் முன்னணி தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்று அறிவித்தார்.
மேலும் இத்தடுப்பூசி அரசின் முழுமையான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் அவர்களை எந்த வித ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கும் என்றும் கூறினார்
அவசரகால பயன்பாட்டிற்கான கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்ததை அமீரகத்தில் உள்ள மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர், இது அரசாங்கம் தனது முன்னணியில் இருப்பவர்களை எவ்வளவு கவனித்துக்கொள்கிறது என்பதைக் காட்டுகிறது.
இன்று வரை அமீரகத்தில் 8.4 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைப்பு (MoHAP) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கோவிட் -19 விதிகளை பின்பற்றாததால் துபாய் அல் ஸபா இரண்டாம் பகுதியில் உள்ளஉணவகம் மூடப்பட்டது.