COVID-19 (Feb 12 2021): புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்- 3307, குணமடைந்தவர்கள்- 3404, இறப்பு – 12
அமீரகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3307 ஆக இருப்பதால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 342,974 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் புதிதாக பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3404 ஆக இருப்பதால் இதுவரையில் 323,191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்று அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைப்பு (MoHAP) இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.
அமீரகத்தில் இன்று மட்டும் கொரோனாவிற்கு 12 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 986 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் புதிதாக மேற்கொண்ட164,551 பரிசோதனையின் மூலம் இந்த புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று வரை அமீரகத்தில் 27.7 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் (MoHAP) தெரிவித்துள்ளது.