COVID-19 (Mar 24 2021): புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்- 2,196, குணமடைந்தவர்கள்- 2,385, இறப்பு – 5
அமீரகத்தில் கொரோனா தொற்றால் இன்று மட்டும் புதிதாக 2,196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 2,385 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைப்பு (MoHAP) தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிற்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 446,594 ஆகவும், பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 429,573 ஆகவும் மற்றும் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,456 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு 15,565 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் புதிதாக மேற்கொண்ட226,275 பரிசோதனையின் மூலம் இந்த புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று வரை அமீரகத்தில் 36 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் (MoHAP) தெரிவித்துள்ளது.