Thursday, October 16, 2025
National

துபாய்: கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத சலவையகம், உணவு நிறுவனம் மற்றும் சலூனை இழுத்து மூடிய அதிகாரிகள் !

துபாயில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றத் தவறிய நான்கு சலவையகம், ஒரு உணவு நிறுவனம் மற்றும் ஒரு சலூன் ஆகியவற்றை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

தினசரி ஆய்வு அறிக்கையின்படி, துபாய் நகராட்சி ஆய்வாளர்கள் மொத்தம் 222 சோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அனைத்து நிறுவனங்களுக்கான மொத்த இணக்க விகிதம் (Compliance Rate) 95% ஐ எட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆறு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் நான்கு நிறுவனங்களுக்கு எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.

துபாய் நகராட்சி, அனைத்து நிறுவனங்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்துகொள்வது, துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் சுழற்சிகளை அதிகரிப்பது போன்றவற்றை உறுதி செய்வதற்காக தினசரி ஆய்வுகளை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.