Monday, March 2, 2026
World

பிரேசிலில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 86,586 பேர் பாதிப்பு…3,398 பேர் உயிரிழப்பு !

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் பிரேசில் நாடு 2 ஆம் இடத்தில் உள்ளது.

பிரேசிலியா: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் நாள்தோறும் அதிகரித்து வருவதால் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அந்நாடு திணறி வருகின்றது.

இந்நிலையில், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 3,398 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டின் மொத்த உயிரிழப்பு 3,25,284 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 86,586 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,839,844 ஆக உயர்ந்துள்ளது.