கொரோனா எதிரொலி: இந்திய பயணிகள் இலங்கை வரத் தடை! விமானத்துறை அமைச்சகம் அறிவிப்பு!
இந்தியாவில் தினந்தோறும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,10,77,410 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்னிக்கை 2,30,168 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இலங்கை நாட்டிற்குள் நுழைய இந்திய பயணிகளுக்கு அந்நாட்டு விமானத்துறை அமைச்சகம் தடை விதித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இலங்கை அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்தியா மீது அமீரகம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஏற்கெனவே பயணத்தடை விதித்துள்ள நிலையில், தற்போது அந்நிய நாடான இலங்கையும் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

