இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை…ஒரே நாளில் 53,415 பேர் பாதிப்பு..249 பேர் பலி !
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்குதல் மிகவேகமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை மொத்தம் 11,787,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11,229,591 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமாகி உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 249 பேர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை மொத்தம் 1,60,726 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
மாநில வாரியாக பாதிப்பு விவரங்கள்:
மகாராஷ்டிரா
மொத்த பாதிப்பு: 25,64,881
மொத்த மீட்பு: 22,62,593
மொத்த இறப்பு: 53,685
கடந்த 24 மணி நேர பாதிப்பு: 31,855
கேரளா
மொத்த பாதிப்பு: 11,09,909
மொத்த மீட்பு: 10,80,803
மொத்த இறப்பு: 4,528
கடந்த 24 மணி நேர பாதிப்பு: 2,456
கர்நாடகா
மொத்த பாதிப்பு: 9,75,955
மொத்த மீட்பு: 9,46,589
மொத்த இறப்பு: 12,461
கடந்த 24 மணி நேர பாதிப்பு: 2,298
தமிழ்நாடு
மொத்த பாதிப்பு: 8,71,440
மொத்த மீட்பு: 8,49,064
மொத்த இறப்பு: 12,630
கடந்த 24 மணி நேர பாதிப்பு: 1,626
ஆந்திரா
மொத்த பாதிப்பு: 8,95,121
மொத்த மீட்பு: 8,84,978
மொத்த இறப்பு: 7,197
கடந்த 24 மணி நேர பாதிப்பு: 585