உலகெங்கும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுன் மீண்டும் அமல்படுத்தப்படுமா ? உலகநாடுகளின் தலைவர்கள் தீவிர ஆலோசனை !
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 5,14,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 90,830 பேருக்கும், அமெரிக்காவில் 59,770 பேருக்கும், பிரான்ஸ் நாட்டில் 38,501 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி நேற்று மட்டும் 9,390 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 2,736 பேரும், அமெரிக்காவில் 1,919 பேரும், இத்தாலியில் 431 பேரும் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர். தற்போது வரை அமெரிக்காவில் 3.19 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிரேசில் நாட்டில் 1.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும் 2.09 கோடி பேர் கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,912 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் கொரோனா தொற்று பல மடங்கு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அந்நாட்டு தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்டன் நாட்டைப் போல மீண்டும் லாக்டவுனை அமல்படுத்துவது குறித்தும் பல நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், லாக்டவுன் காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளும் கூட மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் எண்ணத்தில் தற்போது இல்லை என்றே தெரிய வருகிறது.