துபாய்: பேருந்து செல்லும் பாதைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு Dh600 அபராதம் !!
பிப்ரவரி 7 ஞாயிற்றுக்கிழமை முதல் காலித் பின் வலீத் வீதியில் (Khalid bin Waleed St) புதிதாக திறக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகள் செல்லும் பாதையை தவறாகப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு 600 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி முதல் இந்த புதிய பாதை திறக்கப்பட்டதிலிருந்து இதற்கான ஒரு சலுகை காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிதாக திறக்கப்பட்ட இந்த பிரத்யேக பேருந்துகள் செல்லும் பாதையை மீறுபவர்களுக்கு எதிராக குற்றச் சீட்டுகள் (offence tickets) வழங்கப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (ஆர்டிஏ) அறிவித்துள்ளது.
22 கேமராக்கள் இப்பாதையை கண்காணிக்கும் நிலையில், ஆர்டிஏவின் பேருந்துகள் மற்றும் டாக்சிகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பாதையை பயன்படுத்தும் அல்லது அணுகும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அபராதத்தின் அடிப்படை நோக்கம் பேருந்துகளின் சீரான ஓட்டத்தை உறுதி செய்வதும், பயண நேரத்தைக் குறைப்பதன் மூலம் பேருந்து சேவையை மேம்படுத்துவதும் ஆகும். பேருந்து ஓட்டுனரின் நேரத்தை மிச்சப்படுத்துவது அவர்களின் திருப்தியை அதிகரிக்கும் மற்றும் பொது போக்குவரத்து வழிமுறைகளின் பயணத்தை அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.