Monday, March 2, 2026
NationalTravel

துபாயில் அனைத்து பொது பார்க்கிங் இடங்களும் மூன்று நாட்களுக்கு இலவசம்…RTA அறிவிப்பு !

இன்று முதல் மூன்று நாட்களுக்கு மல்டி ஸ்டோரி பார்க்கிங்கைத் தவிர்த்து அனைத்து பொது வாகன நிறுத்துமிடங்களும் இலவசம் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

துபாய் ஆட்சியாளர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, புதன்கிழமை காலமான துபாய் துணை ஆட்சியாளரும் அமீரகத்தின் நிதி அமைச்சருமான மறைந்த ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வியாழக்கிழமை முதல் அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிகள் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலவச பொது பார்க்கிங் மார்ச் 25 வியாழக்கிழமை முதல் மார்ச் 27 சனிக்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என்றும் பின்னர் மார்ச் 28 ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டண வாகன நிறுத்துமிடமாக மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.