Saturday, October 18, 2025
Discount CouponsNational

துபாய் விற்பனைத் திருவிழா(DSF): 90 சதவிகிதம் வரை அதிரடித் தள்ளுபடி !

துபாய் முழுவதிலும் உள்ள 1000 விற்பனை நிலையங்களில் அதிரடித் தள்ளுபடியாக ஜனவரி 28 முதல் 30 ஆம் தேதிவரையில் 300 பிராண்டுகளைச் சேர்ந்த பொருட்களுக்கு 90 சதவிகிதம் வரை தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தள்ளுபடி திருவிழா ஒருமாத காலமாக நடைபெற்ற நிலையில், இந்த விற்பனைத் திருவிழாவின் கடைசி மூன்று நாட்களுக்கு மக்களுக்கு அதிரடி தள்ளுபடியில் பொருட்களை வழங்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவாசிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் இந்த மூன்று நாட்களுக்கு ஃபேஷன், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் போன்ற ஏராளமான பொருட்களுக்கு 25 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை அதிரடித் தள்ளுபடியை பெறலாம்.

அமெரிக்கன் ஈகிள் அவுட்ஃபிட்டர்ஸ், ஹோலிஸ்டர் கோ, அபெர்கிராம்பி & ஃபிட்ச், கென்சோ, பால்மைன், ஸ்காட்ச் & சோடா, பனானா ரிபப்ளிக், கரோலினா ஹெர்ரெரா, சேனல், டீசல், எர்மெனெகில்டோ ஜெங்கா, ஹோம்பாக்ஸ், இன்டீரியர்ஸ், லா சென்சா பிளஸ் ரீபோக், ரிவர் ஐலேண்ட், ரேங்லர் மற்றும் ஃபேஸ் ஷாப் ஆகிய பிராண்டுகளுக்கு இந்த மாபெரும் தள்ளுபடி பொருந்தும்.