துபாய்: Dh 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்து கடை மூடப்பட்டது
தள்ளுபடி விற்பனையின் போது COVID -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாததற்காக புதன்கிழமை துபாய் கடை மூடப்பட்டு துபாய் பொருளாதாரத்துறை (Dubai Economy) Dh50,000 திர்ஹம்ஸ் அபராதமாக விதித்தது.
துபாயில் ஒரு கடையில் தள்ளுபடி விற்பனையின்போது ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்ததாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் சமீபமாக அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர் (Departmental Store) நிர்வாகத்திற்கு துபாய் பொருளாதார பிரிவு சமீபத்தில் சம்மன் அனுப்பியது. தள்ளுபடி விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் இடையேயான சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.