Saturday, October 18, 2025
NationalTravel

3 நிமிடத்திற்குள் டாக்சி வரவில்லையா ? அப்படியானால் உங்களுக்கு 3000 திர்ஹம்ஸ் பரிசு ! ஹலா (துபாய் டாக்சி) சவால் !!

துபாயில் உள்ள ஹலா (துபாய் டாக்சி) நிறுவனம் சவால் ஒன்றை விடுத்துள்ளது. அதில் நீங்கள் டாக்சியை புக் செய்த 3 வது நிமிடத்தில் உங்களுக்கு டாக்சி வரவில்லை என்றால் 3000 திர்ஹம்ஸ் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு ‘3 நிமிட வருகை நேரம்’ என்று பெயர். இத்திட்டத்தின் மூலமாக, டாக்சிக்களுக்கான அதிக தேவை இருக்கும் இடங்களை எளிதாக கண்டறியமுடியும். டாக்சி ஓட்டுனர்கள், ஆப் வழியாகவே வாடிக்கையாளர்களை எளிதில் அடைய முடியும். மேலும், வெறும் 3 நிமிடங்களில் வாடிக்கையாளர்களை அணுகலாம் என ஹலா நிர்வாகம் உறுதியாக நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் டாக்சியை புக் செய்து 3 நிமிடங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தால் நீங்கள் கரீம் கிரெடிட் (Careem credit) மூலமாக 3000 திர்ஹம்ஸ் பெறுவதற்கான ராஃபில் டிராவிற்குள் (Raffle Draw) நுழைவீர்கள்.

மேலும், ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் இதில் வெற்றிபெறும் நபரை இன்ஸ்டாகிராமில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளது.