Saturday, October 18, 2025
NationalTravel

துபாய்: விமான டிக்கெட்டை மறுபதிவு செய்வதற்கான பாலிசியை நீட்டித்து அறிவித்தது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் !

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பயணச்சீட்டுக்கான பாலிசியை நீட்டித்து அறிவித்துள்ளது. டிசம்பர் 31, 2021 க்கு முன்பான பயணத்திற்காக செப்டம்பர் 30, 2020 க்கு முன்பு பெறப்பட்ட டிக்கெட்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இப்போது 36 மாதங்களுக்குள் எந்த நேரத்திலும் பயணம் செய்ய மறு பதிவு செய்து கொள்ளலாம். இது முந்தைய பாலிசியிலிருந்து 12 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், டிசம்பர் 31, 2021 க்கு முன்பான பயணத்திற்காக அக்டோபர் 1, 2020 க்கு பிறகு பெறப்பட்ட டிக்கெட்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 24 மாதங்களுக்குள் எந்த நேரத்திலும் டிக்கெட்டைப் பயன்படுத்தலாம்.

எந்தவொரு டிக்கெட்டையும் மீண்டும் வழங்குவதற்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்படும், மேலும் வவுச்சர்கள் அல்லது எமிரேட்ஸ் டிக்கெட்டுகளின் பயன்படுத்தப்படாத பகுதிகள் (vouchers or unused portions) அபராதம் இல்லாமல் திருப்பித் தரப்படலாம்.

எமிரேட்ஸ்.காம் (Emirates.com) அல்லது விமான நிறுவனத்தின் சில்லறை மற்றும் தொடர்பு மையங்கள் (airline’s retail and contact centres) வழியாக எமிரேட்ஸ் நேரடியாக வழங்கும் டிக்கெட்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவர்களின் டிக்கெட்டுகள் தானாகவே நீட்டிக்கப்படுவதால் எமிரேட்ஸை தொடர்பு கொள்ள வேண்டியதில்லை. பயண முகவர் (Travel Agent) வழியாக டிக்கெட்டுகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை மீண்டும் பெறுவதற்கு காலாவதி தேதிக்கு முன்பே தங்கள் முகவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.