Monday, March 2, 2026
National

வயதான அமீரக குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் வீட்டிலேயே கொரோனா தடுப்பூசியைப் பெறலாம் – சுகாதார அமைப்பு அறிவிப்பு !

அமீரகத்தில் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற முடியும். இருப்பினும், முதலில் முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசிக்கான முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைப்பு (MoHAP) திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், முதியவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கொரோனா தடுப்பூசியை தங்களின் வீடுகளிலேயே பெறலாம் என்றும் மேலும் தடுப்பூசியை எவ்வாறு பெற முடியும் என்பதை விளக்கி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அமீரகவாசிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள இச்சேவையைப் பெற 80011111 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும் அல்லது அருகிலுள்ள சுகாதார மையத்தைப் பார்வையிட வேண்டும். மேலும், அழைப்பாளர்கள் தங்களின் சந்திப்பை உறுதிப்படுத்த அவர்களின் மொபைல் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும்.

சுகாதார மையத்தின் கீழ் உதவி செயலாளர் டாக்டர் ஹுசைன் அப்துல் ரஹ்மான் அல் ராண்ட் (Dr Hussein Abdul Rahman Al Rand) அவர்கள் கூறுகையில், “அமைச்சகம் தனது பெரும்பாலான சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி சேவையை தொடர்ந்து அளித்து வருகிறது என்றும் வயதான குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் குறிப்பாக நாள்பட்ட நோய் உள்ளவர்கள் உட்பட அனைவரின் மீதும் மிகவும் கவனம் செலுத்தி வருகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.