Saturday, October 18, 2025
NationalTravel

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்: விமான கட்டண தள்ளுபடி பெறும் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் !!

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஒரு புதிய ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சர்வதேச மாணவர்களுக்கு ஒரு நற்செய்தியாக தங்களுடைய நாடுகளுக்கு அடிக்கடி சென்று தங்கள் குடும்பத்தினரை பார்ப்பதற்கும் மற்றும் உலக நாடுகளுக்கும் சென்று வரக்கூடிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

இப்பயணம் மாணவர்களின் இல்லத்திற்கும் பள்ளிக்கும் இடைப்பட்டதாக இருந்தாலும் சரி அல்லது பள்ளி விடுமுறையை கழிக்க தனது நண்பர்களுடன் உலகை சுற்றிபார்ப்பதாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு Economy கட்டணத்தில் 10% சதவிகித தள்ளுபடியும், Business Class கட்டணத்தில் 5% சதவிகித தள்ளுபடியும் வழங்குவதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

மேலும் அவர்கள் தங்கள் பயணத்தில் கூடுதலாக 10 KG பொருட்கள் அல்லது மேலும் ஒரு சாமான் பெட்டியையும் (One Additional Baggage) எடுத்து செல்லக்கூடிய சலுகையும் மற்றும் பயணத்திற்கு ஏழு நாட்களுக்கு முன் இலவசமாக பயண தேதியை மாற்றக்கூடிய சலுகையும் பெறமுடியும் என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.

இச்சலுகையை மாணவர்களுடன் பயணிக்கும் அவர்களுடைய குடும்பத்தினரும் மற்றும் நண்பர்களும் பெறமுடியும் என்றும் STUDENT என்ற சலுகை குறியீட்டை (Promotional Code) பயன்படுத்தி வருகிற அக்டோபர் 30 ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் அனைத்து பயண டிக்கெட்டுகளும் அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை தங்கக்கூடியதாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.