Friday, October 17, 2025
HealthNationalTravel

அபுதாபிக்குள் நுழைய எமிரேட்ஸ் ஐடி(Emirates ID) மற்றும் கோவிட் நெகடிவ் சான்றிதழ்கள் (Covid Clearance Certificates) கட்டாயம் !

அமீரகத்திலிருந்து அபுதாபிக்கு பயணிப்பவர்கள் காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அபுதாபி காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும் பயணிகள் எமிரேட்ஸில் நுழையும் போது தங்களது எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) மற்றும் கோவிட் நெகடிவ் சான்றிதழ்களை (Covid Clearance Certificates) கட்டாயம் காட்ட வேண்டும் என்று அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. முகமூடிகளை அணிவது உட்பட அனைத்து கோவிட் பாதுகாப்பு விதிகளையும் அவர்கள் கடைபிடிப்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஒரு வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை ஓட்டுநர் உட்பட மூன்று பேர் மட்டுமே என்றும் அறிவித்துள்ளது.

வாகன ஓட்டுநர்கள் சோதனைச் சாவடிகளில் பொருத்தமான பாதைகளைப் பின்பற்ற வேண்டும். வெவ்வேறு வாகனங்களுக்கு வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட சைன்போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவசரகால வாகனங்களுக்கு சிவப்பு, கனரக வாகனங்களுக்கு நீலம் மற்றும் எமிரேட்ஸில் நுழைய அனுமதிக்கப்பட்ட வாகனங்களுக்கு பச்சை என்று தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை எதிர்த்து போராட சமூக உறுப்பினர்கள் ஒரு முக்கிய தூணாக இருப்பதை வலியுறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு கட்டுப்படுமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.