Saturday, October 18, 2025
National

எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் சிறப்பு சலுகை.. இரண்டு இரவு இலவச ஹோட்டல் தங்குமிடம், 10Kg இலவச கூடுதல் சாமான்கள் !

இந்தியாவில் இருந்து துபாய்க்கு பயணிக்கும் பயணிகளுக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் இலவசமாக இரண்டு இரவுகளுக்கான ஹோட்டல் தங்குமிடத்தையும், 10 கிலோ வரை இலவச கூடுதல் சாமான்கள் (Free Additional Baggage) கொண்டு செல்லும் வசதியையும் மற்றும் சிறப்பு விமான கட்டண சலுகையையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 15 முதல் ஜூன் 30 வரை பயணத்திற்கு, மார்ச் 8 முதல் 28 க்குள் முன்பதிவு செய்து இந்தியாவில் இருந்து துபாய்க்கு ரிட்டன் டிக்கெட்டுடன் எகனாமி வகுப்பில் பயணம் செய்பவர்கள் ஒரு நாள் இரவு ஜே.டபிள்யூ மேரியட் மார்க்விஸ் ஹோட்டலில் (JW Marriot Marquis hotel) இலவசமாக தங்குவதற்கு தகுதியானவர்கள் என்றும் இதே காலகட்டத்தில் விமானங்களை முன்பதிவு செய்யும் வணிக வகுப்பு மற்றும் முதல் வகுப்பு பயணிகள் தாங்கள் வந்த நாளிலிருந்து இரண்டு இரவுகள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு தகுதியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து துபாய் வழித்தடங்களுக்கு தள்ளுபடி கட்டணமாக எகனாமி வகுப்பிற்கு ரூ.17,982 ம் (Dh905) , வணிக வகுப்பிற்கு ரூ. 68,996 ம் (Dh3,473) மற்றும் முதல் வகுப்பிற்கு ரூ.192,555 ம் (Dh9,700) அறிவித்துள்ளது.

மேலும், துபாயில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் பயணிகளுக்கு 10 கிலோ வரை இலவச கூடுதல் சாமான்கள் (Free Additional Baggage) கொண்டு செல்லும் வசதியையும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் வழங்குகிறது.