இந்த துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் 14 நாட்களுக்கு ஒருமுறை கட்டாய PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்..சுகாதார அமைச்சகம் அறிவிப்பு !
அமீரகம் முழுவதும் ஐந்து துறைகளில் உள்ள ஊழியர்கள் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு முறை கொரோனா PCR பரிசோதனை செய்ய வேண்டும். ஹோட்டல்கள், உணவகங்கள், போக்குவரத்து மற்றும் சுகாதாரம், சமூக மற்றும் தனிப்பட்ட சேவைத் தொழில்களான சலவையகம், சலூன் மற்றும் அழகுநிலையம் ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை மார்ச் 28 முதல் அமலுக்கு வருகிறது.
அபுதாபியில் தனியார் துறைகளிலுள்ள முக்கிய துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் தங்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் இப்பரிசோதனைகளை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.
கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையிலும் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த தேவை உள்ளது. அரசு ஊழியர்களுக்கு வாராந்திர PCR சோதனைகள் ஏற்கனவே கட்டாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், சில தொழிலாளர்களுக்கு கட்டாய கொரோனா PCR சோதனைகளை ஷார்ஜா மற்றும் அஜ்மான் அரசு முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜாவில் உள்ள பெரிய மசூதிகளில் உள்ள பெண்கள் பிரார்த்தனை அரங்குகள், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஆண்களுக்கு பயன்படுத்தப்படும் என்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. மசூதிகள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், பெண்கள் பிரார்த்தனை அரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், இப்புதிய முடிவு மார்ச் 26 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

