Friday, October 17, 2025
Cricket

4-வது டெஸ்ட் போட்டி..முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து…இந்திய அணி அபார பந்து வீச்சு !

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் அக்சர் படேல், அஸ்வின், சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் கடந்த போட்டியை போல் இல்லாமல் ஓரளவிற்கு சிறப்பாகவே விளையாடியுள்ளனர்.

பென் ஸ்டோக்ஸ் அரைசதத்தை அடித்த நிலையில், லாரன்ஸ் 46 ரன்கள், ஓலி போப் 29 ரன்கள் என்று ஓரளவிற்கு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முன்பு அவர்களது ஆட்டம் எடுபடவில்லை.

இதையடுத்து 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை முடித்துள்ளது இங்கிலாந்து அணி. இன்றைய போட்டியில் கேப்டனாக தனது 50வது போட்டியை ஆடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 5 ரன்கள் மட்டும் எடுத்து முகமது சிராஜின் பந்துவீழ்ச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய பௌலர்கள் அக்சர் படேல் (4), ரவிச்சந்திரன் அஸ்வின் (3), முகமது சிராஜ் (2) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (1) விக்கெட்டுகளை வீழ்த்தினர்.