Monday, March 2, 2026
NationalWeather

அமீரகத்தில் கனமழை ! குடியிருப்பாளர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!

அமீரகத்தில் குடியிருப்பாளர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் இன்று சனிக்கிழமை பெய்த மழையின் காரணத்தால் குடியிருப்பாளர்கள் குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) எச்சரித்துள்ளது.

இதற்கு முன்னதாக (NCM) வெளியிட்ட வானிலை எச்சரிக்கையில், “மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடலில் ஏழு அடி உயரம் வரை அலைகள் எழும்பும் என்றும், அதன் காரணமாக சனிக்கிழமை அமீரகத்தின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும்” என்றும் அறிவித்தது.

மேலும், கடற்கரை மற்றும் தீவுப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை குறைந்து சனிக்கிழமை தீவுப்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் மிதமான காற்றும், சில நேரத்தில் வலுவான காற்றும், சில இடங்களில் புழுதிக்காற்றும் வீசக்கூடும் என்றும் (NCM) அறிவித்துள்ளது.