பிரேசிலின் முன்னாள் கால்பந்தாட்டவீரர் ரொனால்டினோவிற்கு கொரோனா தொற்று உறுதி!
பிரேசிலின் முன்னாள் கால்பந்தாட்டவீரர் ரொனால்டினோவிற்கு (Ronaldinho Gaucho) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
உள்ளூர் அணியான அட்லெடிகோ மினிரோவுக்காக விளையாடிய முன்னாள் பார்சிலோனா மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் வீரர் பெலோ ஹொரிசொண்டேயில் இருந்தார், அங்கு அவர் உடல் பரிசோதனை மேற்கொண்டார்.
அவர் கூறுகையில் “நான் பெலோ ஹொரிசொண்டேவிற்கு (Belo Horizonte) நேற்று வந்தடைந்தேன். பிறகு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்போது கொரோனா பாசிட்டிவ் (Corona Positive) பெற்றேன்” என்று இன்ஸ்டாகிராமில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஏ.சி. மிலன், ஃபிளமெங்கோ மற்றும் கிரெமியோ வீரர், அவரது உடல்நிலை மேம்படும் வரை அவர் ஒரு ஹோட்டலில் இருப்பார் என்று கூறினார்.

