Monday, March 2, 2026
National

துபாய்: இந்தியத் துணைத் தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !!

அமீரகத்தில் சமீபமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகளை அமீரக வாழ் இந்தியர்கள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அவசர தேவைகள் இன்றி அமீரக வாழ் இந்தியர்கள் யாரும் துணைத் தூதரக அலுவலகத்திற்கு நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக இணையம் மூலமாக வழங்கப்படும் துணைத் தூதரக சேவைகளை பயன்படுத்தலாம்.

துபாயில் உள்ள துணைத் தூதரகத்தை தொடர்புகொள்ள:

  • PBSK இலவச தொலைபேசி எண் – 800 46342 (24 x 7)
  • PBSK துபாய் மொபைல் அப்ளிகேஷன்
  • மின்னஞ்சல் முகவரி: pbsk.dubai@mea.gov.in
  • வாட்சப் எண்: 054-3090571