முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி !
புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 318 ரன்களை இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் 251 ரன்களை மட்டுமே அடித்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணியின் சார்பில் ஷிகர் தவான் 98 ரன்களை அடித்தார். ரோஹித் ஷர்மா (28), விராட் கோலி (56), க்ருணால் பாண்டியா (58), கேஎல் ராகுல் (62) ரன்கள் அடித்த நிலையில் இந்திய அணி 317 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 318 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக ஆடி விக்கெட் இழப்பின்றி 135 ரன்களை எடுத்தனர். ஜானி பேர்ஸ்டோ (94) ரன்கள் அடித்தார். இந்நிலையில், ஜேசன் ராயின் விக்கெட்டை அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள், ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள், க்ருணால் பாண்டியா ஒரு விக்கெட் என இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து இறுதியில் 42.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.