இந்தியா-இங்கிலாந்து: கடைசி ஒருநாள் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி !
புனே: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 330 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. ரிஷப் பந்த், ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அரைசதங்களை அடித்து இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென்று உயர்த்தினர்.
இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றியை சொந்தமாகினர். ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் நடராஜன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி வீரர்களும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ஒரு தொடரையாவது வெற்றி கொள்ள வேண்டும் என்று இறுதிவரை போராடினர். சாம் கரண் (95) , வுட் (14) ஆகியோர் இறுதிவரை வெற்றிக்கான முயற்சியை மேற்கொண்டனர். இருப்பினும் இந்திய பந்துவீச்சாளர்களின் அதிரடியில் அவர்கள் முயற்சி எடுபடவில்லை . இதையடுத்து இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.