இந்தியா: 5 மில்லியனை கடந்த கொரோனா வைரஸ் !!
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன்று புதன்கிழமை நடந்த கணக்கெடுப்பில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,123 ஆக அதிகரித்து ஒட்டுமொத்தமாக 5 மில்லியனை (Five Million) கடந்தது என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 5 மில்லியனை கடந்த இரண்டாவது நாடு இந்தியா மட்டுமே.
மேலும், இந்த கொடிய தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,066 ஆகவும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1290 பேர் இறந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

