இந்தியா: முதன்முறையாக ஒரே நாளில் 1 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு !
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே நாட்டில் பதிவான ஒருநாள் அதிகபட்ச கொரோனா பாதிப்பாகும்.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 1,25,89,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,16,82,136 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமாகி உள்ளனர். நாடு முழுவதும் தொற்று பாதிப்புடன் 7,41,830 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நாளில் 478 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை மொத்தம் 1,65,101 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
மேலும், இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 7,91,05,163 ஆக அதிகரித்துள்ளது.

