Monday, March 2, 2026
World

இந்தியா: சர்வதேச பயணிகள் விமானத்திற்கு மார்ச் 31 வரை தடை நீட்டிப்பு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் 23 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், விமான ஒழுங்குமுறை ஆணையம் DGCA வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இந்த வருடம் மார்ச் 31 வரை சர்வதேச வர்த்தக பயணிகள் விமான சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் 26, 2020 தேதியில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் செய்யப்பட மாற்றத்தில் இத்தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து 2021 மார்ச் 31 IST 23.59 மணி வரை திட்டமிடப்பட்ட சர்வதேச விமான பயணிகள் சேவை நிறுத்திவைப்பதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் ஜெனரல் (DGCA) ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், குறிப்பிட்ட சில நிபந்தனையின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரத்தின் அடிப்படையில் சர்வதேச திட்டமிடப்பட்ட விமானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் அனுமதிக்கப்படலாம்.

DGCA அங்கீகரித்த விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்பதும் சுற்றறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் வந்தே பாரத் மிஷனின் கீழ் மற்றும் ஜூலை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் உருவாக்கப்பட்ட “ஏர் பபுல்ஸ்” ஒப்பந்தந்ததின் அடிப்படையின் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து, அமீரகம், கென்யா, பூட்டான் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்தியா “ஏர் பபுல்ஸ்” ஒப்பந்தங்களை உருவாக்கியது.

இரு நாடுகளுக்கிடையேயான “ஏர் பபுல்ஸ்” ஒப்பந்தத்தின் கீழ், சிறப்பு சர்வதேச விமானங்களை அவற்றின் பிராந்தியங்களுக்கு இடையில் தங்கள் விமான நிறுவனங்கள் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.