ஐபிஎல்: கொல்கத்தா அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை இந்தியன்ஸ் !
கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. வெற்றிபெற வாய்ப்பு இருந்த போட்டியில் மோசமாக ஆடி கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது.
மும்பை பேட்டிங்:
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா, குவிண்டன் டி காக் களமிறங்கினர். 2-வது ஓவரில் டி காக் 2(6) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோஹித் ஷர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். இதில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அதன் பிறகு அவர் 56(36) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் 1(3), ரோஹித் ஷர்மா 43(32), ஹர்திக் பாண்டியா 15(17), பொல்லார்டு 5(8) ரன்கள் எடுத்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா பேட்டிங்:
இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி சார்பில் நிதிஷ் ராணா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடியில் சுப்மன் கில் 33(24) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய ராகுல் திரிபாதி 5(5), இயான் மோர்கன் 7(7), நிதிஷ் ராணா 57(47), ஷாகிப் அல் ஹசன் 9(9), ரஸல் 9(15), பேட் கம்மின்ஸ் 0(1), தினேஷ் கார்த்திக் 8(11), ஹர்பஜன் சிங் 2(2) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.