Monday, March 2, 2026
National

அபுதாபியில் இஸ்ரேலிய தூதரகம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது !

அமீரகத்தில் இஸ்ரேலிய தூதரகம் திறந்துள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது. நான்கு மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் அரசும் வளைகுடா நாடும் தனது உறவுகளை இயல்பாக்கி வரலாற்று சிறப்புமிக்க உடன்படிக்கையில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அபுதாபியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அதன் தலைவர் திரு ஈதன் நயெஹ் (Eiten Naeh) வருகையுடன் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது.

அபுதாபியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்தது இரு நாட்டு உறவுகளை பல வழிகளில் மேம்படுத்த உதவும் என அமீரகம் தெரிவித்துள்ளது. முன்னதாக இஸ்ரேலில் டெல் அவிவில் தூதரகத்தை நிறுவ அமீரகம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.