60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா !
ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றி, கொல்கத்தாவின் பிளே-ஆஃப் வாய்ப்புக்கு நூலளவு நம்பிக்கையை அளித்துள்ளது. தோல்வியடைந்த ராஜஸ்தான் போட்டியிலிருந்து வெளியேறியது.
லீக் ஆட்டங்களை நிறைவு செய்துள்ள கொல்கத்தா அணி -0.214 ரன் ரேட்டுடன் உள்ளது. இனி டெல்லி – பெங்களூா், ஹைதராபாத் – மும்பை ஆட்டங்களின் முடிவு கொல்கத்தாவின் பிளே-ஆஃப் விதியை நிா்ணயிக்கும். அதில் மும்பையை ஹைதராபாத் வென்று, டெல்லி – பெங்களூா் ஆட்டத்தில் ஏதேனும் ஒரு அணி மோசமான தோல்வியைத் தழுவினால் மட்டுமே கொல்கத்தா பிளே-ஆஃபுக்கு நுழையும்.
துபாயில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா வீரா் பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகன் ஆனாா்.இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் ரிங்கு சிங், லாக்கி ஃபொ்குசன் ஆகியோருக்குப் பதிலாக ஆன்ட்ரே ரஸ்ஸெல், ஷிவம் மாவி ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா். ராஜஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச தீா்மானித்தது.
கொல்கத்தா பேட்டிங்:
அதிகபட்சமாக கேப்டன் மோா்கன் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 68 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.அடுத்தபடியாக ராகுல் திரிபாதி 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 39 ரன்கள் சோ்க்க, ஷுப்மன் கில் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் அடித்தாா்.எஞ்சிய விக்கெட்டுகளில் ரஸ்ஸல் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 25, பேட் கம்மின்ஸ் 1 சிக்ஸா் உள்பட 15 ரன்கள், கமலேஷ் நாகா்கோட்டி 1 ரன் சோ்க்க, நிதீஷ் ராணா, சுனில் நரைன், தினேஷ் காா்த்திக் டக் அவுட்டாகி நடையைக் கட்டினா்.
ராஜஸ்தான் பேட்டிங்:
ராகுல் திவாதியா 3, காா்த்திக் தியாகி 2, ஜோஃப்ரா ஆா்ச்சா், ஷ்ரேயஸ் கோபால் தலா 1 விக்கெட் வீழ்த்தினார். பின்னா் ஆடிய ராஜஸ்தானில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லா் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 35, ராகுல் திவாதியா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 31 ரன்கள் சோ்த்தனா். இதர பேட்ஸ்மேன்களில் ராபின் உத்தப்பா 6, பென் ஸ்டோக்ஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 18, கேப்டன் ஸ்மித் 4, சஞ்சு சாம்சன் 1, ரியான் பராக் 0, ஜோஃப்ரா ஆா்ச்சா் 6, காா்த்திக் தியாகி 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.ஓவா்கள் முடிவில் ஷ்ரேயஸ் கோபால் 2 பவுண்டரிகள் உள்பட 23, வருண் ஆரோன் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4, ஷிவம் மாவி, வருண் சக்கரவா்த்தி தலா 2, கமலேஷ் 1 விக்கெட் சாய்த்தனா்.
ராஜஸ்தான் வெற்றி:
இறுதியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

