IPL 2020: KKR அணியில் சேர ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் சுனில் நரைன் அபுதாபிக்கு வந்தனர்
இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2020) வருகிற செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை அமீரகத்தில் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களில் விளையாடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வருடத்திற்கான IPL போட்டிகளில் 24 போட்டிகள் துபாயிலும் 20 போட்டிகள் அபுதாபியிலும் 12 போட்டிகள் ஷார்ஜாவிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தற்பொழுது அமீரகம் வந்து தங்களின் தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் சேர மேற்கிந்திய தீவுகள் ஆல்ரவுண்டர்கள் சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் அபுதாபி வந்தடைந்தனர்
அவர்களுடன் கே.கே.ஆர் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் கிறிஸ் கிரீன் ஆகியோரும் அணியுடன் இணைவதற்காக அபுதாபிக்கு வந்தனர்.
கொரோன தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் அனைவரும் ஆறு நாட்கள் ஹோட்டல் அறைகளில் தங்கவைக்கப்படுவார்கள்.இந்த கால கட்டத்தில் வீரர்கள் மூன்று எதிர்மறை கோவிட் சோதனைகளுடன் திரும்பினால் (3 Negative Covid Tests), அவர்கள் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் தங்கள் அணியினருடன் சேருவார்கள்.

