Friday, October 17, 2025
PoliticsWorld

குவைத்: பட்டத்து இளவரசராக (Crown Prince) ஷேய்க் மிஷாலுக்கு (Sheikh Mishal) ஆதரவு தரும் குவைத் பாராளுமன்றம் !

குவைத் பாராளுமன்றம் வியாழக்கிழமை ஷேக் மிஷால் அல் அகமதுவை (Sheikh Mishal Al Ahmed) பட்டத்து இளவரசர் பதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட அமீர் புதன்கிழமை அவருக்குப் பெயரிட்டதை அடுத்து, பாராளுமன்றம் தனது ட்விட்டர் பக்கத்தில் இச்செய்தியை தெரிவித்துள்ளது.

ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா (Sheikh Nawaf Al Ahmad Al Sabah) கடந்த வாரம் தனது சகோதரர் ஷேக் சபா அல் அஹ்மத் (Sheikh Sabah Al Ahmad) இறந்ததைத் தொடர்ந்து அமீராக அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்.

ஆக்டோஜெனேரியன் (Octogenarian) ஷேக் மிஷால் நாட்டின் தேசிய காவலரின் துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.