இந்தியாவிலிருந்து குவைத்திற்கு புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம் !
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 17 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் வெள்ளிக்கிழமை காலை கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத்துக்கு புறப்பட்டிருந்த நிலையில், சுமார் 30 நிமிடங்கள் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென்று அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, விமானம் காலை 8:35 மணிக்கு புறப்பட்டு காலை 9:10 மணிக்கு மீண்டும் திரும்பியது. இதற்கு காரணம் விமானத்தின் சரக்கு பகுதியில் (Cargo Section) தீ எச்சரிக்கை மணி ஒலித்ததைத் தொடர்ந்து விமானம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பின்னர் விமானம் திரும்புவதற்கு அனுமதி கோரப்பட்டது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.