குவைத் நாட்டிற்குள் நுழைய PCR ரிசல்ட் தேவை…இந்த 15 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு குவைத் அரசு அறிவிப்பு !
குவைத்தின் சிவில் ஏவியேஷன் டைரக்டரேட் ஜெனரல் (GDCA) 15 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் குவைத் நாட்டிற்கு வருவதற்கு முன்பு PCR பரிசோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது, மேலும், இது MUNA (Medical Utility Network Accreditor) மையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
PCR பரிசோதனை முடிவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களை அடையாளம் காண MUNA அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
குவைத்துக்கு வரும் எந்தவொரு பயணியும் MUNA அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட PCR பரிசோதனைக்கான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும், இது அவர்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுத்திருந்தால் கூடாது. மேலும், பயணிகளுக்கு சளி, இருமல், தும்மல் அல்லது அதிக உடல் உஷ்ணம் போன்ற அறிகுறிகள் இருத்தல் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 நாடுகள் பின்வருமாறு: அமீரகம், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், துருக்கி, பிலிப்பைன்ஸ், கத்தார், ஓமான், சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா.
இந்தியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மீது இந்த முடிவு செயல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 25 முதல் மீதமுள்ள 10 நாடுகளுக்கும் இது அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.