பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம் !
பாரீஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் டேனியல் மெத்வதேவ், அர்ஜென்டினாவின் டீகோ ஸ்வாா்ட்ஸ்மானை எதிா்கொண்டாா்.
இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே டேனியல் மெத்வதேவ் ஆதிக்கம் செலுத்த, அவரை எதிா்கொள்ள முடியாமல் டீகோ ஸ்வாா்ட்ஸ்மான் திணறினாா். இதனால் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய மெத்வதேவ், அடுத்த செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றினாா். இதன்மூலம் மெத்வதேவ் 6-3, 6-1 என்ற நோ் செட்களில் டீகோ ஸ்வாா்ட்ஸ்மானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
இதுவரை ஸ்வாா்ட்ஸ்மானுடன் மோதியுள்ள 4 ஆட்டங்களில் அனைத்து ஆட்டங்களிலும் மெத்வதேவ் வெற்றி பெற்றுள்ளார்.