புதிய தொலைதூரப் பணி விசா (Remote Work Visa) திட்டத்தை அறிமுகம் செய்த அமீரகம் !
வெளிநாட்டுத் தொலைதூர பணிபுரியும் வல்லுநர்களுக்கு (Overseas Remote Working Professionals) அமீரகம் குடியிருப்பு அனுமதி (Residency Permit) வழங்க உள்ளது. இத்தகைய தொழில் வல்லுநர்கள் அமீரகத்தில் வசிப்பதன் மூலம் உலகில் எங்கும் பணிபுரிந்தாலும் அவர்கள் தங்கள் தொலைதூரப் பணியை செய்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூரப் பணி விசாவை அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அறிவித்துள்ளார்.
இத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கியபோது அறிவிக்கப்பட்டது.

