தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை !!
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனாவால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களாகியுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொது போக்குவரத்துக்கு அனுமதி, இ பாஸ் முறை ரத்து என முக்கிய அறிவிப்புகள் இந்த மாத தொடக்கத்தில் வெளியான நிலையில் அடுத்தகட்ட தளர்வுகள் தற்போது வெளியாகி வருகின்றன.
பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆறு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் வட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடமாநில மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்து பாடங்களை படித்துச் செல்கின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் இம்முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை” என திட்டவட்டமாக கூறிவிட்டார்.