ஓமான் நாட்டிற்கு வரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் கட்டாய 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் – ஓமான் அரசு அறிவிப்பு !!
ஓமான் விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் பிப்ரவரி 15 முதல் தங்களை ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள ஓமான் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று நோயின் பரவலை கட்டுப்படுத்த அனைத்து விமான நிறுவனங்களுக்கும் திருத்தப்பட்ட நுழைவு வழிகாட்டுதல்களை (revised entry guidelines) ஓமான் நாட்டின் சிவில் ஏவியேஷன் ஆணையம் (Civil Aviation Authority) வெளியிட்டுள்ளது.
மேலும், அனைத்து பயணிகளும் தங்கள் சொந்த செலவில் குறைந்தது ஏழு இரவுகளுக்கு தங்கக்கூடிய முன்பே உறுதிப்படுத்தப்பட்ட ஹோட்டல் முன்பதிவுகளை (pre-confirmed hotel reservations) விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓமான் நாட்டிற்கு வரும் பயணிகள் நாட்டின் எந்த ஹோட்டலிலும் தங்களின் தங்குமிடங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அதிகாரிகள் தயாரித்த ஹோட்டல்களின் பட்டியலையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயணிகள் பின்பற்றத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
டைம்ஸ் ஆப் ஓமானில் வெளியான ஒரு அறிக்கையின்படி, பார்வையாளர்களின் தனிமைப்படுத்தலுக்காக மஸ்கட்டில் மட்டும் ஆறு ஹோட்டல்களை ஓமான் அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:
- Swiss-Belinn Muscat
- Ibis
- Secure Inn
- Sheraton
- Tulip Inn
- Somerset Panorama Muscat