ஐசிஏ ஒப்புதல் இல்லாமல் ஓமானியர்கள் அமீரக எல்லைப்பகுதிக்குள் நுழைய அனுமதி !
அமீரகத்தின் தரைவழி எல்லைப்பகுதிகள் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் கடுமையான கோவிட் -19 நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
ஓமானிய குடிமக்கள் முன் அனுமதி பெறாமல் தரைவழி எல்லைப்பகுதி வழியாக நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையம் (என்சிஇஎம்ஏ), அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ஐசிஏ) மற்றும் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பு கூட்டாக அறிவித்துள்ளது.
ஓமானியர்கள் எதிர்மறை PCR சோதனை முடிவை வைத்திருப்பதுடன் மேலும் அது தங்கள் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அச்சோதனை முடிவு அவர்கள் நுழைவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அறிவித்துள்ளது.
மேலும் அவர்கள் தங்கள் வருகையின்போது கொரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், அல் ஹோஸ்ன் (Al Hosn Application) பயன்பாடு பதிவிறக்கம் செய்திருக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தில் நான்கு நாட்களுக்கு மேல் தங்க விரும்புவோர் நான்காவது நாளில் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.