அஜ்மான்: வாகன சோதனை மையத்திற்குச் (Speed Vehicle Testing Centre) செல்ல PCR நெகடிவ் ரிசல்ட் கட்டாயம் !
அமீரகத்தில் கொரோனாவால் அனைத்து அரசுத் துறைகளும் PCR பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் மற்றொரு அரசுத்துறையான அஜ்மான் போக்குவரத்து ஆணையம் வாகன சோதனை மையத்திற்குள் (Speed Vehicle Testing Centre) குடியிருப்பாளர்கள் நுழைவதற்கு PCR நெகடிவ் ரிசல்ட் அவசியம் என்று அறிவித்துள்ளது.
அஜ்மான் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, PCR நெகடிவ் முடிவு உள்ளவர்கள் மட்டுமே மையத்தை அணுக முடியும் என்றும், இப்பரிசோதனை 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
கொரோனா பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நடைமுறை பிப்ரவரி 13 சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வளாகத்திற்குள் நுழையும் போது பாதுகாப்பு ஊழியரிடம் தடுப்பூசி அட்டை அல்லது பரிசோதனைக்கான முடிவுகள் காண்பிக்கப்பட்ட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.