ஷார்ஜா: அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு PCR பரிசோதனை கட்டாயம் !!
ஷார்ஜாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கான கட்டாய பி.சி.ஆர் (PCR) பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் சலூன்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் தங்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
உயர் மட்ட அரசு ஊழியர்களுக்கும், அஜ்மான், ராஸ் அல் கைமா மற்றும் உம் அல் குவைன் துறைகளில் உள்ளவர்களுக்கும் இப்பரிசோதனை ஏற்கனவே கட்டாயமாக்கப்பட ஓன்றாகும்.
உள்ளூர் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்ட கொரோனாவின் புதிய பாதுகாப்பு நெறிமுறைகளின் காரணத்தால் ஷார்ஜாவில் இந்நிலை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான இந்த உத்தரவை வெளியிடும் சமீபத்திய நகரமாக ஷார்ஜா உள்ள நிலையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களுக்கு இப்பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

