Friday, October 17, 2025
IPL

IPL 2020: பெங்களூரு அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி !

2020 ஐபிஎல் தொடரின் 31 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியது .

பெங்களூர் பேட்டிங்:
பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆரோன் பின்ச், தேவ்தத் படிக்கல் துவக்கம் அளித்தனர். பின்ச் 20, படிக்கல் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி நிதான ஆட்டம் ஆடினார். வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்ததாக ஏபி டிவில்லியர்ஸை இறக்காமல், ஷிவம் துபேவை இறக்கினார். அதனால் ரன் குவிப்பு தடைபட்டது. கோலி 48, துபே 23, டிவில்லியர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கிறிஸ் மோரிஸ் அதிரடி:
கிறிஸ் மோரிஸ் அதிரடி ஆட்டம் ஆடினார். கடைசி ஓவரில் ஷமி பந்துவீச்சை பிளந்து கட்டினார் மோரிஸ். அந்த ஓவரில் 24 ரன்கள் சேர்த்து, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் பேட்டிங்:
அடுத்து ஆடிய பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் அதிரடி ஆட்டம் ஆடி சிறப்பான துவக்கம் அளித்தார். அவர் 25 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். அடுத்து ராகுல் – கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தனர்.

கடைசி ஓவர் பரபரப்பு:
கடைசி ஓவரில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கிறிஸ் கெயில் கடைசி ஓவரை எதிர்கொண்டார். சாஹல் வீசிய அந்த ஓவரில் அவரால் முதல் மூன்று பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஐந்தாவது பந்தில் ராகுல் ஒரு ரன் ஓட, கெயில் ரன் அவுட் ஆனார்.

பஞ்சாப் வெற்றி:
கெயில் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரன் கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சிக்ஸ் அடித்து பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். பெங்களூர் அணி அதிக ரன்கள் குவிக்காததால் இந்தப் போட்டியில் தோல்வியை தழுவியது.