Monday, March 2, 2026
National

ராஸ்-அல்-கைமாவில் சுற்றுச்சூழல் சார்ந்த மற்றும் பொது அபராதங்களுக்கு 50 சதவீதம் கட்டணத் தள்ளுபடி அறிவிப்பு !

ராஸ்-அல்-கைமாவில் வசிப்பவர்கள் ரமலான் மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் சார்ந்த மற்றும் பொது அபராதங்களுக்கு (Environmental and Public Fines) 50 சதவீதம் கட்டணத் தள்ளுபடி பெறலாம் என்று பொது சேவைகள் துறை (Public Services Department) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களையும் சமூக உறுப்பினர்களையும் மகிழ்விப்பதற்கும், சுற்றுச்சூழல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக வழங்கப்படும் அபராதங்களை செலுத்த ஊக்குவிப்பதற்கும் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக இக்கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், “இவ்விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதன் முக்கிய நோக்கம், விதிகளை கடைபிடிப்பதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி சமூக உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவதாகும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.