Monday, March 2, 2026
World

சவூதி அரேபியாவிற்கு அனுமதி இல்லாமல் உம்ரா பயணம் செய்பவர்களுக்கு 10,000 சவூதி ரியால் அபராதம்…அரசு எச்சரிக்கை!

இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் சவூதி அரேபியாவிற்கு அனுமதி இல்லாமல் உம்ரா பயணம் செய்பவர்களுக்கு 10,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று சவூதி அரேபிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அரபு பத்திரிகையை செய்தியின்படி, “சவூதி உள்துறை அமைச்சகத்தின் அலுவலகபூர்வ அறிவிப்பில், அனுமதியின்றி மக்காவில் உள்ள கிராண்ட் மசூதிக்குள் நுழைய முயற்சிப்பவர்களுக்கு கூடுதலாக 1,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும்” என்று அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை ரமலான் முடிந்த பிறகும், தொற்றுநோயின் தாக்கம் முடியும் வரை அல்லது மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா காலத்தில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் கடைபிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதன் மூலம் கிராண்ட் மசூதியின் செயல்பாட்டுத் திறனைக் கண்காணிப்பதற்கு அமைச்சகம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

கிராண்ட் மசூதியைச் சுற்றியுள்ள மத்திய பகுதிக்குச் செல்லும் அனைத்து பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையங்கள், சாலைகள், தளங்கள் மற்றும் பாதைகளில் பாதுகாப்புப் பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான சவுதி அதிகாரத்துறையின் ஒத்துழைப்பு மூலம் உம்ரா மற்றும் தவக்கல்னா பயன்பாடுகள் (Umrah and Tawakkalna applications) அவற்றின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.