Monday, March 2, 2026
National

ஷார்ஜா: அனைத்து தனியார் பள்ளிகளும் 5 மணிநேரம் வரை மட்டுமே இயங்க அனுமதி…அரசு அறிவிப்பு !

ஷார்ஜாவில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் ரமலானை முன்னிட்டு நாள்தோறும் 5 மணிநேரம் வரை மட்டுமே இயங்கவேண்டும் என்று ஷார்ஜா தனியார் பள்ளிகளுக்கான கல்வி ஆணையம் (SPEA) நேற்று அறிவித்துள்ளது.

பள்ளிகள் காலை 9 மணிக்குள் திறக்கப்பட வேண்டும் என்றும் பணிநேரம் 3 மணிநேரத்திற்கு குறைவாகவோ அல்லது 5 மணிநேரத்திற்கு அதிகமாகவோ இருத்தல் கூடாது என்றும் SPEA அறிவித்துள்ளது. மேலும், இக்குறிப்பிட்ட பணி நேரத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிப்பதுடன் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதும் குறைக்கப்பட வேண்டும்.

ப்ராஜக்ட்கள் மற்றும் டெஸ்டுகள் குறைவான அளவில் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் பிறை பார்ப்பதைப் பொறுத்து 12 அல்லது 13 ஆம் தேதியில் ரமலான் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ரமலான் மாதத்தில் அபுதாபியிலும் பள்ளிகள் இயங்கும் நேரம் 4 மணிநேரமாக குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.