IPL 2020: மும்பையை தெறிக்கவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் !
2020 ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதிக்கொண்டன. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது ராஜஸ்தான். மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய ஸ்கோர் எடுத்தும் அந்த அணியால் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து தெறிக்க விட்டார். சஞ்சு சாம்சன் அவருடன் இணைந்து அதிரடி அரைசதம் அடித்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
மும்பை பேட்டிங்:
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இஷான் கிஷன் 37, சூர்யகுமார் 40, சௌரப் திவாரி 34 ரன்கள் எடுத்தனர். கடைசி 4 ஓவர்களில் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆடினார். 21 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். அவர் மட்டும் 7 சிக்ஸ் அடித்திருந்தார்.
மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் பேட்டிங்:
உத்தப்பா 13, ஸ்மித் 11 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தனர்.
பென் ஸ்டோக்ஸ் இந்த தொடர் முழுவதும் சுமாராகவே ஆடி வந்த நிலையில், இந்தப் போட்டியில் அணிக்கு வெற்றி அவசியம் என்ற நிலையில் அதிரடி சதம் அடித்து அணியை கரை சேர்த்தார். 60 பந்துகளில் அவர் 107 ரன்கள் குவித்து இருந்தார்.
சஞ்சு சாம்சன் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து அதிரடி ஆட்டம் ஆடினார். இந்த ஜோடி 152 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.
மும்பை தோல்வி:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான். ஆட்டநாயகன் விருது சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ்க்கு வழங்கப்பட்டது.

