துபாயின் முக்கிய சாலை 2 நாட்களுக்கு மூடப்படும் என RTA அறிவிப்பு…
துபாயில் உள்ள அல் ஷிண்டாகா சுரங்கப்பாதை நாளை (அக்டோபர் 17) காலை 12.30 (AM) முதல் காலை 8 மணி வரை மூடப்படும் என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
தேராவை, புர் துபாயுடன் இணைக்கும் இந்த சுரங்கப்பாதை இன்று காலை 12.30 (AM) முதல் காலை 10.30 மணி வரையிலும் மூடப்பட்டிருக்கும் என RTA தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆகவே வாகனவோட்டிகள், அல் மக்தூம் மேம்பாலம் (Al Maktoum Bridge) மற்றும் கார்ஹூட் மேம்பாலம் (Garhoud bridge) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் குறிப்பிட்ட சில வழித்தட பேருந்துகளின் இயக்கம் தாமதமாகலாம் என போக்குவரத்து ஆணையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
X13, X02, 8, 95, C01, C03, C07, C09, C18, E306 மற்றும் X23 ஆகிய வழித்தட பேருந்துகள் இயக்கம் இதனால் தாமதமடையலாம்.

அதேபோல, ஷேக் ஹம்தான் பின் சயீத் சாலை இண்டர்சேஞ்ச் மற்றும் ராஸ் அல் கோர்-லிருந்து அகாடமிக் சிட்டிக்குச் செல்லும் அல் அவீர் சாலை ஆகியவற்றில் இன்று அதிகாலை 12 AM முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணி வரை மக்கள் கால தாமதத்தினைச் சந்திக்கலாம். ஆகவே, மனாமா அல்லது திரிபோலி சாலையைத் தேர்ந்தெடுக்குமாறு RTA கேட்டுக்கொண்டுள்ளது.
