ரஷ்யா: கொரோனா முதல் தடுப்பூசியை பொதுமக்களுக்காக வெளியிடுகிறது
ரஷ்யாவின் கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (Gamaleya National Research Center of Epidemiology and Microbiology and the Russian Direct Investment Fund (RDIF) கொரோனாவின் முதல் தடுப்பூசியை பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது என்று ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.
ரஷ்ய சுகாதார அமைச்சகம் ஆகஸ்ட் 11 அன்று COVID -19 க்கு எதிராக ஸ்பூட்னிக் வி (SPUTNIK V) என்ற பெயரில் முதல் தடுப்பூசியை பதிவு செய்தது.
ரஷ்ய தலைநகரில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் பல மாதங்களுக்குள் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி போடுவார்கள் என்று மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.

