வியன்னா ஓபன் டென்னிஸ்: ரஷ்யாவின் ஆன்ட்ரே ரூபலேவ் (Andrey Rublev) சாம்பியன் !
வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூபலேவ் (Andrey Rublev) ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டத்தை வென்றார்.. இந்த சீசனில் இது அவருடைய 5-ஆவது ஏடிபி பட்டமாகும். மேலும், நடப்பு சீசனில் 5 ஏடிபி பட்டங்கள் வென்ற முதல் வீரா் என்ற பெருமையை ரூபலேவ் பெற்றுள்ளாா்.
சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) 4 பட்டங்களுடன் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளாா்.போட்டித்தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த ரூபலேவ் தனது இறுதிச்சுற்றில் இத்தாலியின் லோரென்ஸோ சொனிகோவை 6-4, 6-4 என்ற நோ் செட்களில் வீழ்த்தினாா்.
லோரென்ஸோ சொனிகோ ( Lorenzo Sonego) இறுதிச்சுற்றுக்கு முன் எந்தவொரு சுற்றிலும் செட்களை இழக்காமல் விளையாடியிருந்தாா். அதில் ஜோகோவிச்சுக்கு எதிராக வென்ற ஆட்டமும் அடங்கும். இந்த வெற்றியின் மூலம் லண்டனில் நடைபெற இருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்கு ரூபலேவ் தகுதிபெற்றாா்.

